கோபிசெட்டிபாளையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கோபிசெட்டிபாளையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
X

பேரணியில் கலந்து கொண்ட பிகேஆர் மகளிர் கல்லூரி மாணவிகள்.

கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் பிகேஆர் மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் துணிப்பை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோபி பேருந்து நிலையத்தில் ரோட்டரி கிளப், பி.கே.ஆர். மகளிர் கலைக்கல்லூரி மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ரோட்டரி சங்க தலைவர் கார்த்திகேயன் தலைமையில்,கோபி கோட்டாட்சியர் பழனிதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு அவசியம் குறித்தும், பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

கோபி பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி அண்ணாபாலம், கச்சேரிமேடு, கள்ளிப்பட்டி வழியாக சாந்தி திரையரங்கு வரை சென்றது. நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் வேங்கடாசலம், கோபி அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வேலுமணி, மாவட்ட ஆளுநர் சண்முகசுந்தரம், துணை ஆளுநர் கோதண்டராமன், செயலாளர் சத்தியசீலன், டாக்டர்.பாலமுருகன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!