ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரவுண்டானா அமைக்கத் திட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரவுண்டானா அமைக்கத் திட்டம்
X

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரவுண்டானா அமைப்பது குறித்து அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரவுண்டானா அமைப்பது குறித்து அமைச்சர் முத்துசாமி ஆய்வு நடத்தினார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரவுண்டானா அமைப்பது குறித்து அமைச்சர் முத்துசாமி ஆய்வு நடத்தினார்.

ஈரோடு - பெருந்துறை சாலையில் சம்பத்நகர் பிரிவு எதிரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் நுழைவு பகுதி முன்பு மூன்று சாலைகள் சந்திப்பு பகுதியில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகனங்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரவுண்டானா அமைக்க உத்தேசிக்கப்பட்டது.


இதனையடுத்து, நேற்று முன்தினம் (நவ.13) வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் அரசு அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து, ரவுண்டானா அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாநகராட்சி ஆணையாளர் மனிஷ், துணை மேயர் செல்வராஜ் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

சிக்னலுடன் கூடிய ரவுண்டானா அமைத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும், அதற்கேற்ப கருத்து கேட்டு திட்ட வரைவு தயாரித்து முடிவு செய்யப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!