ஈரோட்டில் இன்று ரூ.105ஐ நெருங்கிய பெட்ரோல் விலை: 24வது நாளாக தொடரும் அதிகரிப்பு

பைல் படம்.
ஈரோட்டில் தொடர்ந்து 24-வது நாளாக இன்றும் பெட்ரோல் -டீசல் விலை உயர்ந்தது. ஈரோட்டில் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.101-ஐ தாண்டியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தமட்டில் இந்திய எண்ணை நிறுவனம் தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகிறது. தற்போது வெளிநாடுகளில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதன் எதிரொலியாக சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
கடந்த 1-ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை வழக்கம்போல் உயர தொடங்கியது. கடந்த 24 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாகவே உள்ளது. இந்தநிலையில், ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் விலை ரூ.105ஐ நெருங்கியது.டீசல் விலையும் ரூ.101ஐ கடந்தது.
பெட்ரோல் :
(இன்று) புதிய விலை - 104.99
(நேற்று) பழைய விலை - 104.69
மாற்றம் - 0.30
டீசல்:
(இன்று) புதிய விலை - 101.08
(நேற்று) பழைய விலை - 100.75
மாற்றம் - 0.33
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu