வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பவானி வட்டாட்சியரிடம் மனு

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பவானி வட்டாட்சியரிடம் மனு
X

பவானி வட்டாட்சியரிடம் சிபிஐ கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

சிபிஐ கட்சியின் சார்பில், ஒரிச்சேரிப்புதூரில் 22 வருடங்களாக வசித்து வரும் குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஒரிச்சேரிபுதூரில் 16-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 22 வருடங்களாக அரசு நிலத்தில் வசித்து வருகின்றனர். இதையடுத்து முறையாக வீட்டு ரசீது,மின் ரசீது இருந்தும் வீட்டு மனை பட்டா வழங்க கோரி பலமுறை மாவட்டம் நிர்வாகத்திடம் மனு வழங்கி வந்தனர்.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பவானி ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் அருள் தலைமையில் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் சென்று பவானி வட்டாச்சியர் அலுவலகத்தில் வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனு வழங்கினர். தொடர்ந்து பட்டா இல்லாததால் குடும்பத்தினர் தொகுப்பு வீடு வங்கியில் கடன் வசதி உள்ளிட்டவை கிடைப்பதில்லை என்பதால் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மனுவை பெற்று கொண்ட வட்டாச்சியர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!