அந்தியூரில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு எதிர்த்து அதிமுகவினர் கோரிக்கை மனு

அந்தியூரில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு எதிர்த்து அதிமுகவினர் கோரிக்கை மனு
X

அந்தியூர் நகர அதிமுக செயலாளர் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்தியூர் பேரூராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை உயர்த்தக்கூடாது என்பதை வலியுறுத்தி, நகர அதிமுகவினர் கோரிக்கை மனு.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சியில் சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை உயர்த்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுமக்களின் நலன் கருதி, பேரூராட்சி நிர்வாகம் வரியினங்களை உயர்த்துவதற்கு அந்தியூர் அதிமுகவினர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று காலை, அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில், அதிமுக., நகர செயலாளர் டிஎஸ் மீனாட்சி சுந்தரம் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமாரிடம், வரி உயர்த்துவற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரியை உயர்த்தக்கூடாது என வலியுறுத்தியும் கோரிக்கை மனு வழங்கினர். அப்போது, மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் வீ. குருராஜ், அந்தியூர் ஒன்றிய துணை செயலாளர் சண்முகானந்தம், கூட்டுறவு சங்கத் தலைவர் பாலுச்சாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!