அந்தியூர் அருகே மாற்று இடம் வழங்கக்கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை மனு

அந்தியூர் அருகே மாற்று இடம் வழங்கக்கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை மனு
X

அந்தியூர் துணை வட்டாட்சியரிடம் மனு வழங்கியபோது, எடுத்த படம்

அந்தியூர் தாலுக்கா அலுவலகத்தில் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை மனு வழங்கினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவிற்கு உட்பட்ட கெட்டிசமுத்திரம் கிராம பஞ்சாயத்தில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் நீர்நிலை புறம்போக்கு என அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில், அப்பகுதியை சேர்ந்த 13 குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 13 குடும்பத்தினரை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவது அல்லது மின் இணைப்பை துண்டிப்பது ஆகிய நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என கோரி இன்று அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் நல்லசாமியிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், விவசாயத் தொழிலாளர்கள் சங்க தாலுகா செயலாளர் எஸ்வி மாரிமுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தியூர் தாலுகா செயலாளர் ஆர் முருகேசன் ஆகியோர் கோரிக்கை மனு வழங்கினர். இதைப் பெற்றுக் கொண்ட துணை வட்டாட்சியர் நல்லசாமி, சாத்தியக்கூறு உள்ள பட்சத்தில் பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயராகவன் கிளை செயலாளர் மாரியப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai in agriculture india