பெருந்துறை அரசு மருத்துவமனையில் தடையில்லா தடுப்பூசி: எம்எல்ஏ ஜெயக்குமார்

பெருந்துறை அரசு மருத்துவமனையில் தடையில்லா தடுப்பூசி: எம்எல்ஏ ஜெயக்குமார்
X

பெருந்துறை தடுப்பூசி முகாமை ஜெயக்குமார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

பெருந்துறை அரசு மருத்துவமனையில் தடையில்லா தடுப்பூசி வழங்கப்படும் என பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கான தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இங்கு தடுப்பூசிகள் போடும் பணி நிறுத்தப்பட்டு இன்று முதல் பெருந்துறை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சியர அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியினை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். பின்னர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகள இருப்பு குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறியதாவது:

பொதுமக்களுக்கு தடையில்லாமல் தினந்தோறும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்,

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!