பெருந்துறையில் வெளிநாட்டைச் சேர்ந்த 2 பேர் கைது

பெருந்துறையில் வெளிநாட்டைச் சேர்ந்த 2 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட முஜாம்மண்டல், இபாதுல் அலி.

பெருந்துறையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பணிக்கம்பாளையம் கேஸ் குடோன் அருகில், ஒரு வீட்டில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக பெருந்துறை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் அங்கு தங்கியிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவர்கள் முஜாம்மண்டல், இபாதுல் அலி என்பதும், இவர்கள் இருவரும் நார்த் பர்கானஸ் மாவட்டம் வெஸ்ட் பெங்காலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் பாஸ்போர்ட், விசா போன்ற உரிய ஆவணங்கள் இல்லாமல் பங்களா தேஷ் நாட்டில் இருந்து இந்தியாவின் மேற்கு வங்கம் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, அங்கிருந்து ரயில் மூலம் பெருந்துறை வந்து தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2பேர் மீதும் வெளிநாட்டவர் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் இவர்களுடன் தங்கியிருந்த ஜஹங்கர், ஆதாஸ் என்ற இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா