பெருந்துறை வாழையிலை மார்க்கெட் இனி காலை 5 மணிக்கே திறப்பு

பெருந்துறை வாழையிலை மார்க்கெட் இனி காலை 5 மணிக்கே திறப்பு
பைல் படம்.
பெருந்துறையில் செயல்பட்டு வரும் வாழை இலை மார்க்கெட் அதிகாலை 5 மணி முதல் செயல்படும் என வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கோவை மெயின் ரோட்டில் உள்ள கோட்டை முனியப்பன் கோவில் எதிரில், தினசரி வாழை இலை மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

கடந்த சில வருடங்களாக காலை 3 மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த வாழை இலை மார்க்கெட்டிற்கு, பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் உள்ள விவசாயிகள் தங்களது வாழை இலைகளை வாகனங்களில் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த வாழை இலைகளை வாங்குவதற்காக திருப்பூர், கோயம்புத்தூர், ஊட்டி, பொள்ளாச்சி, சேலம், பெங்களூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருகை தருகின்றனர். அதிகாலை மூன்று மணிக்கே செயல்படத் தொடங்கும் இந்த மார்க்கெட்டிற்கு, வெளியூரில் இருந்து வியாபாரிகள் வருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.

மேலும் 3.00 மணிக்கு விவசாயிகளும் தங்கள் இலைகளைக் கொண்டு வர வேண்டி உள்ளதால் இரவு வெகு நேரம் வரை வேலை செய்ய வேண்டியுள்ளது. மீண்டும் காலையில் நேரத்தில் எழுந்து வர வேண்டி உள்ளதால் பல்வேறு தொந்தரவுகள் இருந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு, இந்த மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைந்து காலை 5. 00 மணிக்கு மேல் இனிமேல் மார்க்கெட் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்தனர்.

இதன்படி நாளை முதல் காலை ஐந்து மணிக்கு மேல் மார்க்கெட் நடைபெறும் என நோட்டீஸ் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story