ஈரோடு அருகே கொரோனா மாத்திரை உட்கொண்ட விவகாரம்: 4வது நபரும் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் சென்னிமலை கே.ஜி.வலசு பெருமாமலை பகுதியை சேர்ந்தவர் கருப்பனண் கவுண்டர். இவரது மனைவி மல்லிகா, மகள் தீபா. இவர்களது தோட்டப்பணியாளர் குப்பாயம்மாள். கடந்த மாதம் 26ம் தேதி கொரோனா சிகிச்சை முகாமில் இருந்து வருவதாகக்கூறி மர்மநபர் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டதில் மல்லிகா சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். மீதமுள்ள மூன்று பேரில் மகள் தீபா மற்றும் தோட்டபணியாள் குப்பாயம்மாள் ஆகியோர் மறுநாள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனிடையே சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கல்யாணசுந்தரம் என்பவர், கருப்பண்ணகவுண்டரிடம் சுமார் 10 லட்ச ரூபாய் பெற்று திருப்பி தராமல் இழுத்தடித்து வந்துள்ளதும் கடனை கேட்டு வந்த கருப்பண்ண கவுண்டர் குடும்பத்தினருக்கு, கல்லூரி மாணவர் சபரி என்பவர் மூலம் கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி விவசாயத்தில் பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்படும் மாத்திரையை கொடுத்து கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பண்ணகவுண்டர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொடுத்த கடனை திருப்பி கேட்ட நபரின் குடும்பத்தினர் அனைவரையும் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu