பெருந்துறை பகுதியில் வரும் 29-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்

பெருந்துறை பகுதியில் வரும் 29-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
X
சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், வரும் நவம்பர் 29-ந்தேதி நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சிப்காட் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணி, வருகிற 29-ந்தேதி நடக்கிறது. அதனால் பெருந்துறை நகர் முழுவதும், சிப்காட் வளாகம், வாவி கடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், திருவெங்கடம்பாளையம் புதூர், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம் புதூர், வெள்ளியம்பாளையம், சுள்ளிபாளையம், சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானி ரோடு, சிலேட்டர் நகர், ஓலப்பாளையம், ஓம்சக்தி நகர், மாந்தம் பாளையம் ஆகிய பகுதிகளில் அன்று 29-ந்தேதி காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை, மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவல் மின் வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
ai solutions for small business