பெருந்துறை செல்லாண்டி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா ஒத்திவைப்பு

பெருந்துறை செல்லாண்டி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா ஒத்திவைப்பு

பெருந்துறை செல்லாண்டியம்மன் கோயில் பொங்கல் விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக காேவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு.

பெருந்துறை, குன்னத்தூர் ரோட்டில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா பண்டிகை நடைபெறுவது வழக்கம்.

பெருந்துறை செல்லாண்டியம்மன் கோயில் பொங்கல் விழா கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெருந்துறை நகரின் மையப் பகுதியில் அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயில். இக்கோயிலின் பொங்கல் விழா ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரும் முதல் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம்.

இந்த பொங்கல் விழா கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு பொங்கல் விழா வரும் வியாழக்கிழமை நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story