விஷ மாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை

விஷ மாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை
X

பைல் படம்.

பெருந்துறை அருகே விஷ மாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை அருகே சீனாபுரம் அடுத்த நிமிட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 61). தறிப்பட்டறை தொழிலாளி மாரியப்பனுக்கும் அவரது மனைவிக்கும், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று மாரியப்பனிடம் அவரது மனைவி காட்டுக்கு சென்று மாட்டுக்கு புல் எடுத்து வர வர சொல்லி உள்ளார். அதற்கு மாரியப்பன் எடுத்து வர முடியாது என்று கூறிவிட்டு சண்டை போட்டு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

பின்னர் மனைவி காட்டுப் பகுதிக்கு சென்ற போது மாரியப்பன் தான் விஷ மாத்திரை சாப்பிட்டு விட்டதாக கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனைக் கொண்டு சென்றனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!