பெருந்துறையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 10பேர் கைது

பெருந்துறையில்  சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 10பேர் கைது
X

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினர் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெருந்துறையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக பெருந்துறை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் அங்கு தங்கியிருந்த மோட்யூர் ரஹ்மான்(52), , மொக்ஷாட் அலி(43), அகேஷனுரி ரஹ்மான்(32), மோனிருள் இஸ்லாம்(32), முகமது ஷபிக்கூள் இஸ்லாம்(40), அஷரபுஜமான்(26), அரிப்புள் இஸ்லாம்(28), ஷபிக்குள் இஸ்லாம்(40) , சொரட் காஜி(40), இவரது மகன் ரபிகுள் காஜி(20) ஆகிய 10 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது அவர்கள் பங்களாதேஷ் சாட்கிரா மாநிலம் கலிகன்ஜ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் பாஸ்போர்ட், விசா போன்ற உரிய ஆவணங்கள் இல்லாமல் பங்களா தேஷ் நாட்டிலிருந்து இந்தியாவின் மேற்கு வங்கம் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்னர்.

அங்கிருந்து ரயில் மூலம் பெருந்துறை வந்து தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வெளிநாட்டவர் சட்டம் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 10 பேரையும் கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!