நாளை தமிழக முதல்வர் ஈரோடு வருகை

நாளை தமிழக முதல்வர்  ஈரோடு வருகை
X
தமிழக முதலமைச்சர் நாளை ஈரோடு மாவட்டத்திற்கு, கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வருகைதர உள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஈரோடு மாவட்டத்திற்கு அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர்.

அதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கூடுதல் படுக்கை வசதி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு மாநகரம் மற்றும் மாவட்டத்திற்கு 24 மணி நேரமும் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள நாளை ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்கள்.

அதனையொட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பெருந்துறை சிப்காட்டில் செயல்பட்டு வரும் தேசிய ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பெருந்துறை முக்கிய சாலைகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சி.சைபுதீன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture