விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ
X

ஆறுதல் கூறும் எம்எல்ஏ ஜெயக்குமார்.

வேன் மீது கார் மோதிய விபத்தில் காயமடைந்த 16 பேரை பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் வாய்ப்பாடி சூளைமேடு பகுதியைச் சேர்ந்த 16 பேர் கொண்ட குழுவினர் ஈரோட்டில் நடக்கும் ஒரு திருமண நிகழ்வுக்கு சென்றுவிட்டு வேனில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் பெருந்துறை அடுத்துள்ள பெத்தாம்பாளையம் பிரிவு பைபாஸ் பகுதியில் வந்தபோது கேரளாவில் இருந்து வந்த ஒரு கார், வேன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேனில் பயணித்த 16 பேரும் காயங்களுடன் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் காயம் பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு விரைவான சிகிச்சை அளிக்க கோரி மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
future of ai in retail