சென்னிமலை அருகே தலையில் கல்லைப் போட்டு கூலித் தொழிலாளி கொலை

சென்னிமலை அருகே  தலையில் கல்லைப் போட்டு கூலித் தொழிலாளி கொலை
X

பைல் படம்.

சென்னிமலை அருகே கூலித் தொழிலாளியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு அடுத்துள்ள வெள்ளோடு-கனகபுரம் சாலையின் இடைப்பட்ட மடகாட்டுத்தோட்டம் என்னும் பகுதியில் உள்ள விவசாய தோட்டம் ஒன்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக வெள்ளோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் சென்னிமலை அடுத்த ராக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 40) என்பதும், கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் செல்வராஜை மர்ம நபர்கள் யாரோ தலையில் கல்லை போட்டு கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் செல்வராஜ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. செல்வராஜாவை வேறு எங்காவது கொலை செய்து விட்டு தோட்டத்தில் வந்து வீசி சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!