கால்வாய் கான்கிரீட் திட்டத்தை எதிர்த்து கீழ்பவானி பாசன விவசாயிகள் உண்ணாவிரதம்
கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் திட்டத்தை எதிர்த்து பெருந்துறையில் விவசாயிகள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் திட்டத்தை எதிர்த்து பெருந்துறையில் விவசாயிகள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் பெருந்துறை அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழ்பவானி பாசன கால்வாயில் புனரமைக்க அரசு ரூபாய் 710 கோடி ஒதுக்கியுள்ளது. பாசன கால்வாய் கரைகள் 60 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப் பட்டது. தற்போது பல இடங்களில் பழுதடைந்து போனது. இதையடுத்து சுமார் 55 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாயின் கரைகளை கான்கிரீட் தளமாக அரசு திட்டமிட்டுள்ளது.
இதனால் பாசன கால்வாயில் இருந்து நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் பாதிக்கப்படும் பல கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் இதனால் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பல விவசாய சங்கங்கள் கூறிவருகின்றன அதேசமயம் சில விவசாய சங்கங்கள் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
திட்டத்தை எதிர்த்து வரும் விவசாய சங்கங்கள் பல தொடர் போராட்டங்களை நடத்துகின்றனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயத் துறை அமைச்சர் முத்துசாமி இரு தரப்பு விவசாயிகளிடமும் பேச்சு நடத்தினார். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.இப்பிரச்னையை நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தீர்த்து வைப்பார் என்று சில நாள்களுக்கு முன்னர் அமைச்சர் முத்துசாமி கூறினார். ஆனால் இத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பெருந்துறை அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்திற்கு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை வகித்தார் விவசாய சங்கத் தலைவர்கள் வெங்கடாஜலம், ஈ. வி .கே.சண்முகம், துளசிமணி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல்வேறு பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu