/* */

காமராஜர் பிறந்தநாள்: ஈரோட்டில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

பெருந்தலைவர் காமராஜரின் 119 பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் நடைபெற்ற நிழ்ச்சியில், காமராஜரின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பூந்துறை, கொடுமுடி,அரச்சலூர், சிவகிரி, பெருந்துறை, நடுப்பாளையம், ஊத்துக்குளி, குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கொடியேற்றத்துடன் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டம் மற்றம் அன்னதானம் வழங்கினார். இதேபோல் பெருந்துறை விழி இழந்தோர் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்கழ்ச்சிகளில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், தங்கவேல், மாவட்ட பொருளாளர் ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 July 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  3. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  4. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  5. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  8. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  9. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  10. ஈரோடு
    கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!