பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா
X
பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுபவர் எஸ்.ஜெயக்குமார் (42). சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்காக தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட ஜெயக்குமார், வாக்குப்பதிவு நடந்த 6-ம் தேதியன்று பொன்முடி கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று வாக்குப் பதிவினைப் பார்வையிட்டார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக பெருந்துறையிலுள்ள அரசு மருத்துவமனை மருத்துக்கல்லூரியில் அனுமதித்துள்ளனர். இதேபோல் அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை தனிமைபடுத்து கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!