கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

நசியனூரில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஓசப்பாடி கிராமம் ஆதிதிராவிடர்காலனி பகுதியில் சேகர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் நடந்து தனியாக வசித்து வருகின்றனர். இதில், இளைய மகன் குமரேசன் (வயது 28) பெங்களூர் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார். அப்போது பேஸ்புக் மூலம் ஈரோடு மாவட்டம், நசியனூர் பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பவரின் மகள் பூவரசியை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் தங்கி வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.குமரேசன் அவ்வபோது நசியனூர் பகுதியில் உள்ள பூவரசியை சென்று பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ம் தேதி திருவண்ணாமலையில் இருந்து பூவரசியை பார்க்க செல்வதாக கூறிவிட்டு குமரேசன் நசியனூரில் பூவரசியின் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் நீண்ட நேரமாக அறையை விட்டு குமரேசன் வெளியே வராததால் பூவரசி, அவரின் தாய் மீனாட்சி ஆகியோர் குமரேசன் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது சேலையில் குமரேசன் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து குமரேசன் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story