பெருந்துறை அருகே திங்களூர் தொடக்கப்பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

பெருந்துறை அருகே திங்களூர் தொடக்கப்பள்ளியில் ஆட்சியர் ஆய்வு
X

 திங்களூர் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் மதிய உணவை ஆய்வு செய்த ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி.

பெருந்துறை அருகே உள்ள திங்களூர் சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளியில் மதிய உணவினை ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 437 மையங்களில் ஒரு லட்சம் பேருக்கு 11-வது மாபெரும் தடுப்பூசி முகாம் நடந்தது. திங்களூர் சி.எஸ்.ஐ தொடக்கபள்ளியில் நடந்த முகாமை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் திங்களூர் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவிற்காக மசாலா முட்டையுடன் தயாரிக்கப்பட்ட கலவை சாதத்தை ருசி பார்த்து உணவின் சுவை மற்றும் தரத்தினை ஆய்வு செய்தார்.

மேலும் அங்கு மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்த குழந்தைகளிடம் தினமும் உணவு சுவையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

Tags

Next Story
what can ai do for business