பெருந்துறை வாரச்சந்தையில் ரூ.81 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை

பெருந்துறை வாரச்சந்தையில்  ரூ.81 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை
X
ஏலத்திற்கு பவானி மற்றும் கவுந்தப்பாடி பகுதி விவசாயிகள் 5 ஆயிரம் தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்

பெருந்துறை வாரச்சந்தையில் நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு பவானி மற்றும் கவுந்தப்பாடி பகுதிகளில் இருந்து விவசாயிகள் 5 ஆயிரம் தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் முதல் தரம் தேங்காய் ஒன்று ரூ.17 முதல் ரூ.18-க்கும், இரண்டாம் தரம் ரூ.15 முதல் ரூ.16-க்கும், மூன்றாம் தரம் ரூ.12 முதல் ரூ.13-க்கும் விற்பனை ஆனது. தேங்காய் மொத்தம் ரூ.81 ஆயிரத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர். பெருந்துறை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் தேங்காய்களை வாங்கிசென்றார்கள்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare