பெருந்துறை தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பெருந்துறை தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
X

பெருந்துறை தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

பெருந்துறை தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கருப்பண்ணன் தலைமையில், பெருந்துறை தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் பெருந்துறை ஒன்றிய செயலாளர் விஜயன் என்கிற ராமசாமி வரவேற்று பேசினார்.

இக்கூட்டத்தில், வரவிருக்கிற நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற, கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், முன்னாள் எம்எல்ஏ பொன்னுதுரை, பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், பி சி எம் எஸ் துணைத்தலைவர் ஜெகதீஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!