ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி: அதிமுக சார்பில் எஸ்.என்.பாலகிருஷ்ணன் போட்டி
பெருந்துறை ஒன்றியம் 10வது ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.என்.பாலகிருஷ்ணன் வேட்பாளராக தேர்வு.
பெருந்துறை ஒன்றியத்தில் 10-ஆவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினராக பதவி வகித்தவர் ஜெயக்குமார். இவர் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார். இதனையடுத்து 10-ஆவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. தற்போது 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள இடங்களுக்கும் தற்செயல் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பெருந்துறை ஒன்றியம் 10வது ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.என்.பாலகிருஷ்ணன் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து வேட்பாளரின் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.சி. கருப்பண்ணன் மற்றும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வேட்பாளர் எஸ்.என்.பாலகிருஷ்ணனை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அறிமுகப்படுத்தினர். இதையடுத்து கூட்டத்தில் பேசிய கருப்பண்ணன், இந்த உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் எஸ்.என். பாலகிருஷ்ணன் அவர்களை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற கழகத் தோழர்கள் அனைவரும் எழுச்சியுடன் உழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu