டெண்டர்கள் மீது விசாரணை: மு.க.ஸ்டாலின்

டெண்டர்கள் மீது விசாரணை: மு.க.ஸ்டாலின்
X
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் டெண்டர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும். இது எச்சரிக்கை என ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள கடப்பமடை பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களிடையே மனுக்களை பெற்று, பல்வேறு சாதனைகள் செய்த தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் ஈரோட்டின் அவலநிலைகளை குறும்படமாக திரையிட்டும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் துறையில் வெளிப்படையாக லஞ்சம் கேட்பதாகவும், அது குறித்த ஆடியோவை மக்கள் முன் வெளியிட்டனர்.

ஒவ்வொரு துறையிலும் கடைசி நேரத்தில் கொள்ளையடிக்க அதிமுகவினர் திட்டமிட்டு புதிய திட்டங்களை அறிவிப்பதாகவும், 3 மாதத்திற்கு பிறகு திமுக ஆட்சி அமைந்தவுடன் தவறு செய்பவர்கள் சிறையில் அடைக்கப்படுவர்கள் என்றார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேலையிழந்த மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என்ற ஸ்டாலின், தொண்டர்களிடையே வாங்கிய மனுவின் பிரச்சனைகளை தீர்க்க தனி அதிகாரி நியமிக்கப்படுவார் என்றார்.

கலைஞர் என்னை மகனாக பார்க்கவில்லை தொண்டனாகவே பார்த்தார் என்றும், இப்போது நான் தலைமை தொண்டனகவே தான் நினைக்கிறேன் என்றார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் அனைத்து துறைகளிலும் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டதாக குற்றம் சாட்டிய ஸ்டாலின், திமுக மக்களிடம் புகார் மனு வாங்குவது முதல்வருக்கு பிடிக்கவில்லை என்றும் போன் செய்தால் குறைகள் தீர்க்கப்படும் என முதல்வர் சொல்லவில்லை என்றும் குறைகள் மட்டுமே கேட்பார்கள் என்றார்.

தேர்தல் நெருங்கி வருவதால் 20 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்கின்ற முதல்வர், கடந்த 4 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்பு என்ன என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 1 கோடி பேர் வேலை வாய்ப்பிற்காக காத்து இருப்பதாகவும், அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பட்டதா என்றும் இரண்டு தொழில் முனைவோர் மாநாட்டின் மூலம் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் என்னென்ன என்றார்.

அதிமுக ஆட்சியில் டெண்டர் கொள்ளை நடப்பதாகவும், 3888 பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் டெண்டர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும், இது எச்சரிக்கை என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் கூவத்தூரில் முதல்வர் ஆனது போல் கருணாநிதி ஆகவில்லை என்றும் தமிழ் காக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர் தான் கருணாநிதி என்றும், ஆட்சி கவிழும் என தெரிந்தே ஆதரித்தவர் கருணாநிதி என்றும் சசிகலா முதல் மோடி வரை அனைவரது பாதமும் தாங்கும் பழனிசாமிக்கு கருணாநிதி பற்றி பேச தகுதியில்லை என்றார்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!