பெருந்துறை: சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு

பெருந்துறை: சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

வெள்ளோடு அருகே சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வெள்ளோடு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது உலகபுரம் வடுவகாடு ஊருக்கு மேற்புறம் உள்ள ஒரு முட்புதரில் 5 பேர் கொண்ட கும்பல் சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கோவிந்தராஜ் (வயது 40), சரவணன் மைந்தன் (வயது 26), சரவண சங்கர் (வயது 28), சந்தோஷ் (வயது 32), அன்பரசு (வயது 25) ஆகியோர் என தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளோடு போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!