/* */

பவானி கூடுதுறையில் இன்று முதல் புனித நீராட அனுமதி

அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய திரண்ட பொதுமக்கள் இன்று முதல் புனித நீராட அனுமதி அளித்துள்ளது.

HIGHLIGHTS

பவானி கூடுதுறையில் இன்று முதல் புனித நீராட அனுமதி
X

பவானி கூடுதுறை.

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கட்டுப்பாடுகளுடன், பக்தர்கள் பரிகாரம் செய்ய கடந்த 1-ந் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் ஆற்றில் புனித நீராட தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி மக்கள் குறைந்த அளவே வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

கூடுதுறையில், நீண்ட நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் இன்று அமாவாசையொட்டி கூடுதுறைக்கு பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். கார்த்திகை அமாவாசை என்பதால் இன்று அதிகாலை முதலே கூடுதுறைக்கு பொதுமக்கள் பலர் வந்து குவிந்தனர்.

இந்நிலையில், இன்று முதல் புனித நீராடவும் அனுமதிக்கப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் கூடுதுறையில் புனித நீராடினர். இதையொட்டி ஆற்றுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து சானிடைசர் மூலம் கைகள் கழுவிய பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Updated On: 4 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்