அந்தியூர் அருகே காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை புகார்

அந்தியூர் அருகே காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை புகார்
X

பைல் படம்.

அந்தியூர் அருகே காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கீழ்வாணி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள், அதே பகுதியில் அரசு பள்ளியில் படித்து வருகிறார். தற்போது தேர்வு விடுமுறை என்பதால், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்தியூர் அருகே உள்ள தாசாலியூருக்கு தனது உறவினர் வீட்டுக்கு மாணவி சென்றார்.

இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே செல்வதாக கூறிய மாணவி நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் தோழிகள் வீட்டில் விசாரித்தும் எதுவித பயனும் இல்லை. இதுகுறித்து அந்தியூர் காவல் நிலையத்தில் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா