பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா வரும் 7-ம் தேதி தாெடக்கம்

பண்ணாரி அம்மன் கோவில் முகப்பு வாயில்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவிலில் குண்டம் விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
இதைத்தொடர்ந்து பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் சப்பரங்கள் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் 18-ந் தேதி கோவில் முன்பு கம்பம் நடும் விழா நடக்கிறது. முக்கிய விழாவான குண்டம் விழா 22ம் தேதி நடைபெறுகிறது. அப்போது அதிகாலை 4 மணி அளவில் குண்டம் இறங்கி பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 23ம் தேதி புஷ்ப ரதம் கோவிலை சுற்றி வரும் நிகழ்ச்சியும், 24-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 25-ந் தேதி திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.28-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu