பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா: 22-ம் தேதி உள்ளூர் விடுமுறை

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா: 22-ம் தேதி உள்ளூர் விடுமுறை
X

பைல் படம்

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி மார்ச் 22-ம் தேதி உள்ளூர் அரசு விடுமுறையாக ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் குண்டம் விழாவை முன்னிட்டு வரும் 22-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு வரும் 22-ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், மார்ச் 26ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாகச் செயல்படும்.பள்ளிக் கல்லூரிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த விடுமுறை பொருந்தாது, தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. 22-ம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில்,மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சாரநிலைக் கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!