அந்தியூர் பேரூராட்சி துணைத் தலைவராக திமுகவின் பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு

அந்தியூர் பேரூராட்சி துணைத் தலைவராக திமுகவின் பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு
X

தேர்தல் நடத்தும் அலுவலர் சால்வை அணிவித்த போது எடுத்த படம்.

அந்தியூர் பேரூராட்சி துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி துணைத்தலைவருக்காண மறைமுகத் தேர்தல் கடந்த இரண்டு முறை, கவுன்சிலர்கள் யாரும் வராதததான் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று மாலை 3 மணிக்கு தேர்தல் நடைபெற்றது. மறைமுக தேர்தலுக்கான ஏற்பாடுகளை பேரூராட்சி அதிகாரிகள் செய்திருந்தனர். மொத்தமுள்ள 18 கவுன்சிலர்களில் திமுக கவுன்சிலர்கள் 12 பேர், காங்கிரஸ், சுயேச்சை தலா ஒருவர் என மொத்தம் 14 கவுன்சிலர்கள் தேர்தல் நடக்கும் அறைக்கு வந்தனர். இதில் எட்டாவது வார்டு திமுக கவுன்சிலர் ஏ.சி.பழனிச்சாமி துணைத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.


அவரை தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் .சி.பழனிச்சாமி துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.துணைத் தலைவராக ஏ.சி.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து பேரூராட்சி தலைவர் எம். பாண்டியம்மாள் மற்றும் கவுன்சிலர்கள், பேரூராட்சி அதிகாரிகள் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.இந்த மறைமுக தேர்தலை அதிமுக கவுன்சிலர்கள் இருவரும், 9வது வார்டு திமுக கவுன்சிலர் செந்தில், சிபிஎம் கவுன்சிலர் கீதாசேகர் ஆகிய 4 பேரும் புறக்கணிப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!