கோபிச்செட்டிப்பாளையம் அருகே விபத்தில் பெயிண்டர் பலி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே விபத்தில் பெயிண்டர் பலி
X
கோபிச்செட்டிப்பாளையம் அருகே, மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெயிண்டர் பலியானார்.

கோபி அருகே உள்ள புதுக்கரைப்புதூரை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 23). பெயிண்டர், திருமணம் ஆகாதவர். நேற்று முன்தினம் இரவு புதுக்கரைபுதூரில் இருந்து கோபிக்கு கருணாகரன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாரியூர் செல்லும் ரோட்டில் வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட கருணாகரன் படுகாயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் போலீசார் கருணாகரன் இறந்துவிட்டார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த சாமுண்டி என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
the future of ai in healthcare