சத்தியமங்கலம் அருகே உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை..!

சத்தியமங்கலம் அருகே உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை..!
X

உடலுறுப்பு தானம் செய்த கோவிந்தராஜின் உடலுக்கு சத்தியமங்கலம் வட்டாட்சியர் மலர் வளையம் வைத்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

Erode Today News,Erode Live Updates, Erode News- சத்தியமங்கலம் அருகே உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 47). லாரி டிரைவரான இவர் கடந்த வாரம் கர்நாடகா மாநிலம் மைசூருக்கு லோடு ஏற்றிச் சென்றார்.

அப்போது, மைசூர் நெடுஞ்சாலையில் கண்ணனூர் என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார். பின்னர், மைசூர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


இந்நிலையில், நேற்று அவர் மூளைச்சாவு அடைந்தார். அவரின் உடல் உறுப்புகளை, குடும்பத்தினர் தானம் செய்தனர். இதனையடுத்து, கோவிந்தராஜின் உடல் நேற்று இரவு கொத்தமங்கலத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

கோவிந்தராஜின் உடலுக்கு, சத்தியமங்கலம் வட்டாட்சியர் சக்திவேல் ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், அவரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்வில், காவல்துறையினா், உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினா் மற்றும் ஊா்ப் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். மேலும், உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது பொது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது .

Tags

Next Story