அந்தியூர் அருகே கூட்டுறவு துறை மூலம் மருந்தகம் திறப்பு

அந்தியூர் அருகே கூட்டுறவு துறை மூலம் மருந்தகம் திறப்பு
X

எம்எல்ஏ மருந்தகத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்த அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம்.

70 இடங்களில் மருந்தகம் செயல்படுத்தும் வகையில் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் விற்பனையை துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் கூட்டுறவு துறை சார்பில், 70 இடங்களில் மருந்தகம் செயல்படுத்தும் வகையில், காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் விற்பனையை துவக்கி வைத்தார். இதன்படி, அந்தியூர் தொகுதிக்குட்பட்ட வெள்ளித்திருப்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு மருந்தகம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விஜயசக்தி குத்து விளக்கேற்றினார். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ மருந்தகத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!