கூகலூர் தாழைக்கொம்புதூர் பகுதியில் பகுதிநேர நியாய விலை கடை திறப்பு

கூகலூர் தாழைக்கொம்புதூர் பகுதியில் பகுதிநேர நியாய விலை கடை திறப்பு
X

பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கிய எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் பேரூராட்சி பகுதியில் பகுதிநேர நியாய விலை கடையை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாழைக்கொம்புதூர், மெத்தைக்கடை பகுதியில் பகுதி நேர நியாய விலைக் கடை இன்று திறக்கப்பட்டது.

கோபி ஒன்றிய கழக பொறுப்பாளர் ரவிந்தரன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் புகழேந்தி, சவுண்டப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஸ்குமார், கூகலூர் பேரூராட்சி தலைவர் ராஜராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கி தொடங்கி வைத்தார். இதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!