குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு
X

பைல் படம்

கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் கிராமத்தில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து ஆகியனவற்றை கணக்கில் கொண்டு 13.04.2022 முதல் 09.06.2022 வரை மொத்தம் 57 நாட்களில் 42 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

மேலும், 15 நாட்கள் தண்ணீர் விடுவதை நிறுத்தம் செய்தும் குண்டேரிபள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து 87.091 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீரை 2,496 ஏக்கர் புன்செய் பாசனத்திற்கு வலது மற்றும் இடது கரை வாய்க்கால் மூலம் வழங்கப்பட உள்ளது என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி