அந்தியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நம்பிக்கை நூலகம் திறப்பு

அந்தியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நம்பிக்கை நூலகம் திறப்பு
X

அந்தியூரில் நடைபெற்ற நம்பிக்கை நூலகம் துவக்கவிழா.

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நம்பிக்கை நூலகம் துவக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தேர்வீதியில் நடைபெற்ற நம்பிக்கை நூலகம் துவக்க விழாவில், அந்தியூர் பேரூராட்சியின் 3வது வார்டு கவுன்சிலர் கீதாசேகர் தலைமை வகித்தார். அந்தியூர் அரசு மருத்துவமனை மருத்துவர் கவிதா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தியூர் தாலுக்கா செயலாளர் ஆர்.முருகேசன் வரவேற்றார். ஈரோடு காசிபாளையம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் துரைராஜ் கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்தார். அந்தியூர் உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மணி மருத்துவர் அமல்ராஜ் ஈரோடு பாரதி புத்தகாலயம் இளங்கோ, கீ.மா.சுந்தரம் ஆகியோர் புத்தகங்களை வாசித்து வாசிப்பைத் துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஷாநவாஸ், பேரூராட்சி கவுன்சிலர்கள் சரஸ்வதி விஸ்வ நாதன், பத்மநாபன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க தாலுகா செயலாளர் எஸ் வி மாரிமுத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தாலுகா செயலாளர் ஏ.கே.பழனிச்சாமி மீன்பிடி கூட்டமைப்பு மாநில குழு உறுப்பினர் எல் சேகர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இறுதியில் நூலக குழு நிர்வாகி செபஸ்டியன் நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!