கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு நீர்மோர் பந்தல் திறப்பு

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு நீர்மோர் பந்தல் திறப்பு
X

பொதுமக்களுக்கு இலவசமாக நீர்மோரை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட இலவச நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகர அதிமுக சார்பில், ஆண்டுதோறும் கோடை காலங்களில் இலவசமாக நீர்மோர் பந்தல் அமைத்து, பொதுமக்கள் காலை முதல் மாலை வரை நீர்மோர் வழங்கப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக, இந்த ஆண்டும் கோபி நகர அதிமுக சார்பில், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு, நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

இந்த நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, கே.ஏ.செங்கோட்டையன் பொதுமக்களுக்கு இலவசமாக இளநீர் மற்றும் நீர்மோர் போன்றவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்பி சத்தியபாமா, நகர செயலாளர் பிரினியோ கணேஷ் , மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!