ஈரோடு மாவட்ட நியாய விலைக்கடை காலிப் பணியிடத் தேர்வுக்கு இணையத்தில் அனுமதிச்சீட்டு

ஈரோடு மாவட்ட நியாய விலைக்கடை காலிப் பணியிடத் தேர்வுக்கு இணையத்தில் அனுமதிச்சீட்டு
X

நியாய விலைக்கடை காலிப்பணியிடத் தேர்வுக்கு அனுமதிச் சீட்டு இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் நடத்தும் நியாயவிலைக்கடை காலிப்பணியிடத் தேர்வுக்கு அனுமதிச் சீட்டு இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் நடத்தும் நியாயவிலைக்கடை காலிப்பணியிடத் தேர்வுக்கு அனுமதிச் சீட்டு இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்விற்கான அனுமதிச் சீட்டு (www.drberd.in) என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மண்டல இணைப்பதிவாளரும், ஈரோடு மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவருமான ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் 90 விற்பனையாளர் மற்றும் 10 கட்டுநர் பணியிடங்கள் உள்ளது. இதனை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 25.11.2024 தேதி முதல் 28.11.2024 தேதி வரையும் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 29.11.2024ஆம் தேதியன்று ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள ஈரோடு மாநகராட்சி மண்டபம், விசிடிவி ரோடு, ஈரோடு-638 001-இல் நடைபெற உள்ளது.

எனவே. நேர்முகத் தேர்விற்கான அனுமதிச் சீட்டை ஈரோடு மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்திலிருந்து (www.drberd.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், நேர்முகத் தேர்விற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி. முன்னுரிமைத் தகுதி மற்றும் இதர தகுதிகளுக்கான அசல் சான்றிதழ்கள் மற்றும் சுய ஒப்பமிட்ட இரு நகல்கள், இரு கடவுச் சீட்டு அளவிலான புகைப்படம் மற்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்திய ரசீது நகல் ஆகியவற்றை சமர்ப்பிப்பதுடன் அனுமதிச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தவறாது பின்பற்ற வேண்டும்.

இதில், ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படின் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய குழுவின் தொலைபேசி எண் 0424-2214378 மற்றும் jrerd.drb@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்