பங்களாப்புதூர் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி

பங்களாப்புதூர் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி
X

கோபிசெட்டிபாளையம் அரசு தலைமை மருத்துவமனை பைல் படம்

பங்களாப்புதூர் அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி டிராக்டர் டிரைவர் உயிரிழப்பு.

ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொண்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் டிராக்டர் டிரைவர். முருகேசன் சொந்த வேலை காரணமாக, மேட்டுப்பாளையம் சிறுமுகை சென்று விட்டு, இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

சத்தி-அத்தாணி சாலையில், வளைவில் திரும்பும் போது, நிலை தடுமாறி இருசக்கர வாகனம் சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகேசன், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பங்காளப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்