பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானி - சத்தி சாலையில் திப்பிச்செட்டிப்பாளையம் அருகே பழனிச்சாமி என்பவரின் தோட்டம் அருகில் வாகன விபத்தில் ஒருவர் அடிபட்டு கிடப்பதாக பவானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் பார்த்தபோது சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் வலதுபக்க தலை இடது தோள் பட்டையிலும் அடிபட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

பிறகு அவரைப் பற்றி விசாரித்த போது ஊர் பெயர் விலாசம் தெரியவில்லை. கடந்த 4 நாட்களாக அந்தப் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு அதே பகுதியில் சுற்றிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றிய போலீசார் பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!