அந்தியூர் அருகே நேரிட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 7 பேர் படுகாயம்

அந்தியூர் அருகே நேரிட்ட  வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 7 பேர் படுகாயம்
X

அந்தியூர்  அண்ணாமடுவு அருகே உள்ள கந்தாம்பாளையம் என்ற இடத்தில் நேரிட்ட சாலை விபத்து

அந்தியூர் அருகே நேரிட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் 7 பேர் படுகாயம் அடைந்தனர்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பருவாச்சி அம்மன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் தனது நண்பர் பழனிச்சாமியும், இருசக்கர வாகனத்தில், அந்தியூரில் இருந்து பருவாச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.இருசக்கர வாகனத்தை ராஜகோபால் ஓட்டிச் சென்றார்.அண்ணாமடுவு அருகே உள்ள கந்தாம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் ஒன்றன் பின் ஒன்றாக வந்த இரண்டு இருசக்கர வாகனத்தில் அடுத்தடுத்து மோதினார்.

இந்த விபத்தில், தலையில் பலத்த அடிபட்டு ராஜகோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த இரட்டைக்கரடு கண்ணாடிபாளையம் அருகே உள்ள போத்தநாயக்கனூரைச் சேர்ந்த சங்கர்( 21,) சரவணன்(16,) சுதாகர்( 31,) ஆனந்த்( 20,) மோகன்( 22,) மணிகண்டன்( 20,) பருவாச்சி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி( 50 ) ஆகிய ஏழு பேரும் பலத்த காயமடைந்தனர்.

அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதைத் தொடர்ந்து, பழனிச்சாமி பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, ஆனந்த் மணிகண்டன் மோகன் ஆகியோர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.விபத்தில் இறந்த ராஜகோபாலின் உடல் அந்தியூர் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு