பவானி அருகே குடும்பத் தகராறில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

பவானி அருகே குடும்பத் தகராறில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்துகொண்ட குமார்.

பவானி அருகே குடும்ப தகராறில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டை ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். தனியார் பால்பண்ணையில் மேற்பார்வையாளர்.

இவரது மனைவி வைதேகி. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் வைதேகி கடந்த 6 மாதமாக திருச்செங்கோட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பலமுறை அழைத்தும் வைதேகி குடும்பம் நடத்த வராததால் மன உளைச்சலுடன் காணப்பட்ட குமார், நேற்று இரவு மதுபோதையில் வீட்டின் மேற்கூரையில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு