8ம் ஆண்டு நினைவு தினம்: ஈரோட்டில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

8ம் ஆண்டு நினைவு தினம்: ஈரோட்டில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
X

ஜெயலலிதா படத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாநகர மாவட்ட செயலாளருமான ராமலிங்கம் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அருகில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு உள்ளிட்ட பலர் உள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஈரோட்டில் அதிமுக சார்பில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஈரோட்டில் அதிமுக சார்பில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று (டிச.5) அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அவரது படம் மற்றும் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இ தேபோல, பன்னீர் செல்வம் பூங்காவில் ஜெயலலிதா உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வீரக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் ரத்தன் பிரித்வி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சதீஷ்குமார், பகுதிச் செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஸ், கோவிந்தராஜன், பாலாஜி, துரைராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து, அண்ணா தொழிற்சங்க தலைவர் மாதையன், வக்கீல் அணி மாவட்ட செயலாளர் துரை சக்திவேல், தமிழ்நாடு தனியார் அண்ணா மின் அமைப்பு மாநில தலைவர் மின்மணி, பிரதிநிதி முருகானந்தம், முன்னாள் கவுன்சிலர் வீரா செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது