பொங்கல் பண்டிகை: ஜன.10 முதல் 14ம் தேதி வரை ஈரோட்டில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகை: ஜன.10 முதல் 14ம் தேதி வரை ஈரோட்டில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
X

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஈரோட்டில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக, ஜன.10ம் தேதி முதல் 14ம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஈரோட்டில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக, ஜன.10ம் தேதி முதல் 14ம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் சார்பில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக ஈரோடு மண்டல பொது மேலாளர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகின்ற தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலத்தின் சார்பில் பயணிகளின் வசதிக்காக ஜன.10ம் தேதி முதல் 14ம் தேதி முடிய சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து கோவை, மதுரை, சென்னை, திருச்செந்தூர், இராமேஸ்வரம், நாகர்கோவில், திருநெல்வேலி, திருச்சி, பழனி, சேலம், நாமக்கல், கரூர், சத்தி மற்றும் ராசிபுரம் ஆகிய ஊர்களுக்கு 300 புறப்பாடுகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கு ஏற்றவாறு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி