உலக மகளிர் தினம்: கோபியில் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தானில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

உலக மகளிர் தினம்: கோபியில் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தானில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
X
உலக மகளிர் தினத்தையொட்டி, ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தானில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

உலக மகளிர் தினத்தையொட்டி, ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தானில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்களை தடுப்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.


அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் கோபி அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீ சாய் சிந்து செவிலியர் கல்லூரி சார்பில் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிங்க் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.

14 வயதுக்கு உட்பட்டோர், 19 முதல் 30 வயது வரை, 30 முதல் 40 வயது வரை, 40 வயதுக்கு மேற்பட்டோர் என 4 பிரிவுகளில் நடத்தப்பட்ட மராத்தான் ஓட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள், சிறுமிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.


ஈரோடு சட்ட கல்லூரி சேர்மேனும் மாநில திமுக நெசவாளர் அணி செயலாளருமான சிந்து ரவிச்சந்திரன் தலைமையில், ஈரோடு சட்ட கல்லூரி துணைத்தலைவர் டாக்டர்.கிஷோர் ரவிச்சந்திரன், இணைச்செயலாளர் அருண் பாலாஜி, ஈரோடு சட்டகல்லூரி துணைத்தலைவர் காயத்திரி அருண் பாலாஜி, ஸ்ரீ சாய் சிந்து செவிலியர் கல்லூரி இணைச்செயலாளர் சாரு ரூபா கிஷோர் முன்னிலையில் ஸ்ரீ சாய் சிந்து அறக்கட்டளை செயலாளர் மீனாட்சி ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கல்லூரி வளாகத்தில் தொடங்கிய மராத்தான் ஓட்டமானது காமராஜ் நகர், வாய்க்கால் மேடு, ஓலப்பாளையம் பிரிவு வரை சென்று மீண்டும் கல்லூரி வந்தடையும் வகையில் நடைபெற்றது. நான்கு பிரிவுகளிலும் முதல் 4 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

Next Story