ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல் நாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல்: தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல் நாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல்: தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்
X

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ்.என்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, முதல் நாளில் 3 பேர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.மனிஷ்.என் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, முதல் நாளில், 3 பேர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.மனிஷ்.என் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ்.என் இன்று (ஜன.10) மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது.

அதனைத் தொடர்ந்து, வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி இன்று (ஜன.10) காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. முதல் நாளான இன்று 3 சுயேட்சை வேட்பாளர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

வருகிற 17ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். தேர்தல் தொடர்பான புகார்கள் இதுவரை ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, கட்டுபாட்டு அறை மற்றும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு, தேர்தல் தொடர்பான விதிமுறைகள் மீறல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பறக்கும் படை குழுவினர் மூலம் தற்போது வரை ரூ.2.80 லட்சம் மதிப்பிலான தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்தப் பேட்டியின் போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம், மாநகர் நல மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், மாநகர பொறியாளர் விஜயகுமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!