துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள்: ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நல உதவி திட்டங்கள்

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள்: ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நல உதவி திட்டங்கள்
X

ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அட்சயம் அறக்கட்டளை மறுவாழ்வு இல்லத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நல உதவி திட்டங்களை அமைச்சர் முத்துசாமி வழங்கிய போது எடுத்த படம்.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நல உதவி திட்டங்களை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நல உதவி திட்டங்களை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் கே.இ.பிரகாஷ் எம் பி., பி.எஸ்.சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையில் ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அட்சயம் அறக்கட்டளை மறுவாழ்வு இல்லத்தில் மாவட்ட அமைப்பாளர் ஜெ.திருவாசகம் தலைமையில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சருமான சு.முத்துசாமி அத்தியாவசிய பொருட்கள் மதிய அறுசுவை உணவு எல்,இ.டி., டிவி வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில், மாநில நிர்வாகிகள் திமுக நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மாணவரணி துணை செயலாளர் வீரமணி ஜெயக்குமார், மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், சின்னையன்,பழனிசாமி, திண்டல் மணிராசு, கேமாரசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் கதிரம்பட்டி மகாலிங்கம், பொன்னுசாமி, ஈரோடு மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியம், மொடக்குறிச்சி ஒன்றிய திமுக செயலாளர் குணசேகரன், மாநகர நிர்வாகிகள் விமல் (எ) நந்தகுமார், பெரியார் நகர் சந்திரசேகர், பகுதி செயலாளர்கள் லட்சுமண குமார், வில்லரசம்பட்டி முருகேசன், ஈரோடு மாவட்ட தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரகுராம், பாலசுப்பிரமணியம், ராகவேந்திரன், விஜயராஜன், சதீஷ்குமார், அந்தியூர் நித்தின், மாநகர அமைப்பாளர் மற்றும் மாநகர துணை அமைப்பாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!