கோபிச்செட்டிப்பாளையம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

கோபிச்செட்டிப்பாளையம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள ஏழூர் வேட்டுவன்புதூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மினியப்பன். இவரது அத்தை ராமாயாளுக்கு (வயது 85) திருமணமாகி குழந்தை இல்லை. கணவரும் இறந்து விட்டதால் தனது அக்கா பராமரிப்பில் வீட்டில் வைத்து கவனித்து வந்துள்ளனர். ராமாயாளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மூதாட்டி ராமாயாள் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்றிக் கொண்டார். அலறல் சத்தம் கேட்டு மினியப்பனின் மனைவி, மினியப்பன் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து விட்டு தீக்காயங்களுடன் இருந்த ராமாயாளை 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

அதனை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராமாயாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!